உலகெல்லாம் உணர்ந்து ஓதற்கரியவனாகிய சிவபெருமான்
மீது இடையறா பக்தியும் ,நித்தம் மரகத விநாயகர் பூஜையும்,
உலகமெங்கும் இரத்தின வணிகம் செய்யும் உரிமையும்,
மன்னவர்களுக்கு மணிமுடி சூடும் பெரும்பேறும் ,தனக்கென
தனிக்கொடி வைத்துக்கொள்ளும் தகுதியும் உடையவர்கள்
சந்திரகுல தனவைசியராகிய அருவியூர் நகரத்தார் எனப்பழைய சுவடியோன்று எடுத்து இயம்புகிறது.
"நகரத்தார்" எனும் சொல் இக்காலத்தில் பெரும்பான்மையாக
செட்டி நாட்டுப்பகுதியில் வாழும் நாட்டுக்கோட்டைச்செட்டியார்களை குறித்தாலும் பழங்காலத்தில் வணிகர்கள் அனைவரையும் குறிக்கும்
பொதுச் சொல்லாகவே இச்சொல் விளங்குகிறது.
முற்கால கல்வெட்டுகளில் இன்னகரத்தாரை "மணிக்கிராம நகரத்தார்",ஐநூற்றுவ நகரத்தார்","நாகநாட்டு நகரத்தார்"
"அருவியூர் நகரத்தார் "போன்ற சொற்களால் அறியப்படுகிறது.

ஆதியில் சீர்மிகு சம்பகதீவில் நாகநாட்டில் சத்தியாபுரி என்ற நகரத்தில் இச்சந்திரகுல கோத்திர வைசியர்கள் மரகத விநாயகர் பூஜையும்,கோபதீஸ்வரர் வழிபாடும்,சதாசிவகுரு பீடத்தில்
தீட்சாகிரியையும் ,இரத்தின வியாபாரமும் செய்து கொண்டு
மன்னர்களால் சிறப்பாக மதிக்கப்பட்டு விபூதி,உத்திராட்சம்,
தரித்து சைவ சித்தாந்திகளாக வாழ்ந்து வந்தனர்.
நாகநாட்டு மன்னன் கொடுங்கோலனாகி கடுந்தண்டனைகள்
இவர்களுக்கு வழங்கவே அந்நாட்டை நீத்து தொண்டைநாட்டு
காஞ்சீபுரத்தை வந்தடைந்தனர்.வைசியர்களின் வரவறிந்த அரசன் அகமகிழ்ந்து ன்போது வரவேற்று,உபசரித்து,ஆதரவளித்து
தன்னாட்டிலேயே வாழுமாறு வேண்டிக்கொண்டான்,வேந்தனின் வேண்டுகோளை ஏற்று நகரத்தார் அவ்வூரிலேயே தங்கினர்.மன்னவன் வேண்டுகோளின்படி புஷ்கர நதியில் நீராடி சத்யபுரீச்வரரை தரிசித்து,அருணகிரி சிவசங்கராசாரியிடம் தீட்சாகிரியயைப் பெற்றுக்கொண்டனர்.மரபு வழுவாமல்.அறம்பிறழாமல்
எல்லார்க்கும் இனியராய் ,ஈர நெஞ்சினராய் பன்னேடுன்காலம் அந்நகரிலேயே வாழ்ந்து வந்தனர்.காலத்தின் கோலத்தால்
தோன்றிய பிரதாபராஜன் என்ற மன்னவன் அநீதியின் உற்ற தொழனானான்.வணிக குல மக்களின் துன்பத்தை இன்பமெனக்கொண்டான்.ஆகவே களிவருடம் 2312ல் விக்ருதி
ஆண்டில் ஆண்டுவருபவனுக்கஞ்சி ஆண்டவனை வணங்கி
சோழநாடு ஏகினர்.