Friday, 25 July 2014

20 வது ஆண்டு பொதுக்குழுக்கூட்டம்

நாள்:ஸ்ரீஜய வருடம் ஆடி மாதம்11ம் தேதி
         27,07,2014ஞாயிற்றுக்கிழமை காலை9,00 மணி
இடம்:S.V.S.V. சுப்பிரமணியன்புஷ்பவள்ளி கல்யானமகால்
          6.D.D.ரோடு,பங்கஜம் காலனி(கணேஷ் தியேட்டர் பின்புறம்)
         காமராஜர் சாலை,மதுரை-9.
                             பொருள்;
          1)இறைவணக்கம்.
          2)பொருளாளர் வரவுசெலவு சமர்ப்பித்தல்
          3)செயலாளர் 2011-2014 ஆண்டு அறிக்கை
        4)அருவியூர் தெற்குவளவு நகரத்தார்கள் மதுரை கிளை சங்கமும், 
         சிங்கம்புணரி கிளை சங்கமும் இணைந்து பிரான்மலை  ஸ்ரீ  மங்கைபாகர் 
        தேனம்மை திருமணமண்டபத்தில் ஸ்ரீஜய வருடம் ஆவணிமாதம்
      15ஆம்  தேதி 31.08.2014 ஞாயிற்றுக்கிழமை  ஏற்பாடு  செய்துள்ள                      'கல்யானமாலை'' மணமகன்,மணமகள் பயோடேட்டா ஜாதக 
       விபரங்கள் மதுரைக்கிளை உறுப்பினர்கள் ஒத்துழைப்புடன் 
       வலைத்தளத்தில் வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
       மேலும் நமது நகரத்தார்கள் தகவல்கள், கோவில்விழா 
       செய்திகள்,போன்ற விபரங்களையும் வெளியிட நகரத்தார்கள் 
       ஒத்துழைப்பு பெறுவது தொடர்பாக,
           5)2013-2014 கல்வியாண்டு 10 ஆம்வகுப்பு  +2 ஆம்வகுப்பு மாணவ,                     மாணவியர்களுக்கு முதல் 3 அதிக மதிப்பெண் பெறும்  
           கிளைச்சங்க மாணவ,மாணவியர்களுக்கு பரிசுத்தொகை 
           வழங்குவது சம்பந்தமாக
            6)நிர்வாகிகள் தேர்வு-16 செயற்குழு உறுப்பினர்கள்
               (மதுரை கிளை சங்க நகரத்தார்உறுப்பினர்கள் மட்டும்) பகுதி
             வாரியாகவும்,14 ஊர் நகரத்தார்களையும் இணைத்து தேர்வு    
             செய்யப்பட்ட செயற்குழு உறுப்பினர்களில் தலைவர், 
               செயலாளர்,பொருளாளர்,கௌரவதலைவர்,2 உதவிதலைவர்கள் 
               ,உதவிசெயலாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 
              நிர்வாகிகள் தேர்வு தேர்தல் அதிகாரி:
              திரு,மு.குழந்தைவேலுசெட்டியார் அவர்கள்,முன்னாள் பொருளாளர்


              இவண்
              S.இராதாகிருஷ்ணன்,செயலாளர்
              அருவியூர் தெற்குவளவு நகரத்தார்கள் மதுரை கிளை சங்கம்




Saturday, 21 June 2014

"கல்யாண மாலை "

அருவியூர் தெற்குவளவு நகரத்தார்கள் மதுரை கிளை சங்கமும், 
சிங்கம்புணரி கிளை சங்கமும் இணைந்து நடத்தும்

"கல்யாண மாலை " 

அழைப்பு. 

பேரன்புடையீர்,

                                அருவியூர் தெற்குவளவு நகரத்தார்கள் வேலை நிமித்தமாகவும்,உத்தியோகம் காரணமாகவும்,நமது பூர்வீக ஊரைவிட்டு பல ஊர்களில் வாழ்ந்து வருகிறார்கள்.அதனால் நமது பிள்ளைகளுக்கு தகுந்த வரன் அமைவது சிரமமாக உள்ளது.அதை தவிர்க்கும் பொருட்டு  மதுரை கிளை சங்கமும்,சிங்கம்புணரி கிளை சங்கமும் இணைந்து பிரான்மலை ஸ்ரீ மங்கைபாகர் தேனம்மை திருமண மண்டபத்தில் " கல்யானமாலை"நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்ய உள்ளோம்.
                               "கல்யானமாலை"நிகழ்ச்சியின் காரணமாக தங்களின் பிள்ளைகளுக்கு நல்ல வரன் அமையும்.இந்த கல்யாண மலை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் நாங்கள் குறிப்பிடும் தேதியில் தங்களுடைய வரனுடன் கலந்து கொண்டு பொருத்தமான வரன் பெற்றுசெல்ல அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
                               இத்துடன் அனுப்பியுள்ள கல்யானமாலை விண்ணப்ப படிவத்தை தெளிவாக பூர்த்தி செய்து போட்டோ  2 ம் ,ஜாதக நகல்( ஜெராக்ஸ்)  2 ம் சேர்த்து கொண்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
                               மேற்படி "கல்யாண மாலை" நிகழ்ச்சிக்கு பொதுநல சங்க நிர்வாகிகளும்,செயற்குழு உறுப்பினர்களும்,கிளை சங்க நிர்வாகிகளும்,முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு
அருவியூர் தெற்குவளவு நகரத்தார்கள்
 மதுரை கிளை சங்கம்&சிங்கம்புணரி கிளை சங்கம்

திரு மு.குழந்தைவேலு செட்டியார்,சிங்கம்புணரி ,Cell No:9487377516
திரு S.இராதா கிருஷ்ணன்,வெள்ளலூர்(இருப்பு)மதுரை Cell No:9842341948
திரு பழ.சுவாமிநாதன் செட்டியார்.குன்னரம்பட்டி.(இருப்பு)மதுரை Cell No:9159154101
திரு ராம.காசிலிங்கம் செட்டியார் ,சிங்கம்புணரி ,Cell No:9976104688
திரு மு.இளையபெருமாள் செட்டியார் வெள்ளலூர்(இருப்பு)மதுரை Cell No:9442938338
திரு விஸ்வநாதன் செட்டியார்,சிங்கம்புணரி ,Cell No:9443062288



Sunday, 21 April 2013

அருவியூர் நகரத்தார் வரலாறு

உலகெல்லாம் உணர்ந்து ஓதற்கரியவனாகிய சிவபெருமான்
 மீது இடையறா பக்தியும் ,நித்தம் மரகத விநாயகர் பூஜையும்,
உலகமெங்கும் இரத்தின வணிகம் செய்யும் உரிமையும்,
மன்னவர்களுக்கு மணிமுடி சூடும் பெரும்பேறும் ,தனக்கென
 தனிக்கொடி வைத்துக்கொள்ளும் தகுதியும் உடையவர்கள்
 சந்திரகுல தனவைசியராகிய அருவியூர் நகரத்தார் எனப்பழைய சுவடியோன்று எடுத்து இயம்புகிறது.
"நகரத்தார்" எனும் சொல் இக்காலத்தில் பெரும்பான்மையாக
 செட்டி நாட்டுப்பகுதியில் வாழும் நாட்டுக்கோட்டைச்செட்டியார்களை குறித்தாலும் பழங்காலத்தில் வணிகர்கள் அனைவரையும் குறிக்கும்
 பொதுச்  சொல்லாகவே இச்சொல் விளங்குகிறது.
முற்கால கல்வெட்டுகளில் இன்னகரத்தாரை "மணிக்கிராம நகரத்தார்",ஐநூற்றுவ நகரத்தார்","நாகநாட்டு நகரத்தார்"
"அருவியூர் நகரத்தார் "போன்ற சொற்களால் அறியப்படுகிறது.
ஆதியில் சீர்மிகு சம்பகதீவில் நாகநாட்டில் சத்தியாபுரி என்ற நகரத்தில் இச்சந்திரகுல கோத்திர வைசியர்கள் மரகத விநாயகர் பூஜையும்,கோபதீஸ்வரர் வழிபாடும்,சதாசிவகுரு பீடத்தில்
 தீட்சாகிரியையும் ,இரத்தின வியாபாரமும் செய்து கொண்டு
 மன்னர்களால் சிறப்பாக மதிக்கப்பட்டு விபூதி,உத்திராட்சம்,
தரித்து சைவ சித்தாந்திகளாக வாழ்ந்து வந்தனர்.
நாகநாட்டு மன்னன் கொடுங்கோலனாகி கடுந்தண்டனைகள் 
இவர்களுக்கு வழங்கவே அந்நாட்டை நீத்து தொண்டைநாட்டு
 காஞ்சீபுரத்தை வந்தடைந்தனர்.வைசியர்களின் வரவறிந்த அரசன் அகமகிழ்ந்து ன்போது வரவேற்று,உபசரித்து,ஆதரவளித்து
 தன்னாட்டிலேயே வாழுமாறு வேண்டிக்கொண்டான்,வேந்தனின் வேண்டுகோளை ஏற்று நகரத்தார் அவ்வூரிலேயே தங்கினர்.மன்னவன் வேண்டுகோளின்படி புஷ்கர நதியில் நீராடி சத்யபுரீச்வரரை தரிசித்து,அருணகிரி சிவசங்கராசாரியிடம் தீட்சாகிரியயைப் பெற்றுக்கொண்டனர்.மரபு வழுவாமல்.அறம்பிறழாமல்
 எல்லார்க்கும் இனியராய் ,ஈர நெஞ்சினராய் பன்னேடுன்காலம் அந்நகரிலேயே வாழ்ந்து வந்தனர்.காலத்தின் கோலத்தால்
 தோன்றிய பிரதாபராஜன் என்ற மன்னவன் அநீதியின் உற்ற தொழனானான்.வணிக குல மக்களின் துன்பத்தை இன்பமெனக்கொண்டான்.ஆகவே களிவருடம் 2312ல் விக்ருதி 
ஆண்டில் ஆண்டுவருபவனுக்கஞ்சி ஆண்டவனை வணங்கி
 சோழநாடு ஏகினர்.

Saturday, 20 April 2013

அருள்மிகு ஸ்ரீ முத்துப்பிடாரி அம்மன் திருக்கோயில் குடமுழுக்கு விழா

அருவியூர் தெற்கு வளவுநகரத்தை சேர்ந்த பட்டினமுடையான். மற்றும் பணம்பாக்குடையான் ஆகிய குடிப்பட்டத்தை சேர்ந்தவர்களது குல தெய்வமான அருள்மிகு ஸ்ரீ முத்துப்பிடாரி அம்மனது திருக்கோயில் குடமுழுக்கு விழா 15.04.2013 அன்று மிக சிறப்புடன் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம்,திருப்பத்தூர் வட்டம்,எஸ்,புதூர் ஒன்றியம்,கரிசல்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள இத்திருக்கோயில் மிகவும் பழைமையானது.
 இந்த குடமுழுக்கு விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அருள்மிகு ஸ்ரீ முத்துப்பிடாரி அம்மனது அருளாசியினைப்பெற்றனர்.











Thursday, 27 September 2012

மதுரை மாவட்டம்,மேலூர் தாலுகா,வெள்ளலூர் நாட்டைசேர்ந்த ஏழை காத்தம்மன் கோவில் திருவிழா 25,26.9.2009 அன்று நடைபெற்றது....
.அதன் புகைப்பட தொகுப்பை காணலாம்....




தேரோட்டத்திற்கு தயாராய் தேர் 
                                           வெள்ளலூர் அம்மன் கோவிலிலிருந்து.....
நேர்த்திக்கடனுக்காக பூக்குடைகள்....

                                          ஏராளமாய் பெண்கள் மதுக்குடம் ஏந்தி.....







                           வரம் வேண்டிசிலை ஏந்தி பெண்களின் அணிவகுப்பு....








                                     அம்மனின் வடிவாய் ஏழு பெண் குழந்தைகள்.....


                                                வெள்ளலூர் மந்தைகோவில்....

                                                 என்றும் வற்றாத சுனை.....